சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் சோசலிசவாதிகள் ஆகிவிட முடியாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
ராம்நகரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளோருக்கும் சோசலிசத்துக்கும் நெடுந்தொலைவு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கொள்கையில் சமரசம் செய்வோர், ஆட்சியைப் பிடிக்கச் சமூகத்தைப் பிரித்துப் பார்ப்பவர்கள் ஒருபோதும் சமாஜ்வாதி ஆக முடியாது எனக் கூறி மறைமுகமாக சமாஜ்வாதிக் கட்சியைச் சாடினார்.
ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த பாராபங்கி சோசலிசத்தின் கோட்டையாகத் திகழ்ந்ததாகவும், இப்போது சமாஜ்வாதி என்னும் பெயரில் போலி சோசலிசவாதிகள் தலையெடுத்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.