சுரண்டை அருகே உள்ள நொச்சிகுளத்தில் கண்டறியப்பட்ட 800 ஆண்டு பழமையான உருளை வடிவ கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள நொஞ்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சின்ன வீரசின்னு என்பவரின் மகன் வீரமல்லையா. இவர், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிஏ வரலாறு பயின்று வருகிறார். இந்நிலையில், அவரது ஊரில் திருமலையாண்டி என்பவரின் மகன் அப்பையாவின் இடத்தில் உருளை வடிவ கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை வழிபட்டு வருவதாகவும் கல்லூரி பேராசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த கல்லூரி தலைவர் ராஜகோபால் மற்றும் செயலாளர் விஜயராகவன் ஆகியோரின் அறிவுறுத்தல்படி பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா மற்றும் சமூக ஆர்வலர் அஸ்வத் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்த உருளை வடிவ கல்வெட்டில் இருந்த எழுத்துகளை பவுடர் போட்டு ஆய்வு செய்தனர்.
;
இதைத் தொடர்ந்து ஆய்வில் இக்கல்வெட்டு 1268 – 1312 காலகட்டத்தில் (13ம் நூற்றாண்டு) 800 ஆண்டுகளுக்கு முந்திய 1294 – 95ம் ஆண்டு சய வருடத்தில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் இதனை அப்போது ஆட்சி செய்த மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னன் காலத்தில் எழுதப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM