சென்னை: சென்னையில் மீண்டும் ஆன்லைன் லோன் ஆப் மோசடி தலை துக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு லோன் ஆப் மூலம் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டினர் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சென்னை மாநகர காவால்த்துறையில் இருந்து மாற்றப்பட்டு சி.பி.சி.டி விசரணையில் உள்ளது. விரைவில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் அதே லோன் ஆப் மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ்க்கு 6 புகார்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனியார் ஓட்டலில் பணியாற்றும் சேனை சேத்துப்பட்டை சேர்ந்த கிரண்குமார் உட்பட 6 பேர் இவ்வாறு லோன் ஆப் மூலம் கடன் பெற்று பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.இவர்கள் ஆன்லைனில் குறிப்பிட்ட ஆப் மூலம் கேட்ட லோன் பணத்தை காட்டிலும் குறைவான அளவே கொடுத்துவிட்டு, விரைந்து முழுத்தொகையும் செலுத்த கூறி மிரட்டுவதாக புகார் தெரிவித்த்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.