புதுடில்லி-உலகம் முழுதும் பல மணி நேரம் முடங்கிய ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகமான டுவிட்டர், பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.நேற்று முன்தினம் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமல் கோடிக்கணக்கானோர் தவித்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:டுவிட்டர் தளத்தில், தொழில்நுட்ப கோளாறால் ஏராளமானோர் தகவல்களை பதிவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறோம். தற்போது இந்த கோளாறு சரி செய்யப்பட்டு, வழக்கம் போல டுவிட்டர் வலைதளம் செயல்படத்துவங்கியுள்ளதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உலகளவில் ஐந்தில் ஒருவருக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
Advertisement