தங்கம் விலையானது இரண்டு மாத உச்சத்தில் இருந்து வருகின்றது. இது அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் பாதுகாப்பு புகலிடமாக இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையும் விஸ்வரூப எடுத்து வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து தங்கம் விலையானது உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!
சிறந்த ஹெட்ஜிங்
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருந்து வருகின்றது. குறிப்பாக பணவீக்கத்திற்கு 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக இருந்து வருகின்றது.
அரசியல் பதற்றம்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச அளவில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச சந்தையில் பங்கு சந்தையில் பலத்த சரிவினையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
பங்கு சந்தைகள் வீழ்ச்சி
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், பங்கு சந்தையில் பலத்த வீழ்ச்சியினை கண்டுள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தையில் இருக்கும் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் மீடியம் டெர்மில் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக 2 மாதத்தில் இல்லாதளவுக்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் குறையலாம்
சமீபத்திய நாட்களாக தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றது. ஆக முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும், புராபிட் புக்கிங் செய்யலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது உச்சத்தில் இருந்தாலும், மீடியம் டெர்மில் அதிகரித்தாலும், எப்போது வேண்டுமானாலும் குறையலாம்.
ஆபரண தங்கம் விலை
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சர்வதேச சந்தைகள் விடுமுறை என்றாலும், ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து, 4715 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்து, 37,720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 68 ரூபாய் அதிகரித்து, 5,144 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 544 ரூபாய் அதிகரித்து, 41,152 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஆபரண வெள்ளி விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 67.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 674 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
gold price jumps to nearly 2 month high, gold prices fall anytime soon
gold price jumps to nearly 2 month high, gold prices fall anytime soon/தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் குறையாலாம்.. நிபுணர்களின் சூப்பர் வாய்ப்பு..!