கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென பெய்தமழையால் காய வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் நனைந்தன. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களும் நனைந்தன. இந்தச் சூழலில் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM