சென்னை
பாஜகவின செய்தி தொடர்பாளர் போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கோஷமான ஒரே நாடு ஒரே தேர்தல் எனப் பேசி உள்ளார். இது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்
அப்போது அவர் செய்தியாளர்களிடம்,
”அதிமுகவை“பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது என்று தொடர்ந்து நாங்கள் விமர்சித்து வருகிறோம். தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் செய்தி தொடர்பாளராகவே மாறி பேசி வருகிறார்.
”மேற்கு வங்க ஆளுநர் தன்னுடைய அதிகார வரம்பு மீறலை வெளிப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தை முடக்கியுள்ளார். ஆனால் அவருக்கு அப்படி எந்த அதிகாரமும் இல்லை. அதைப்போல் பாஜகவின் செயால் திடமான‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை அதிமுகவின் தலைவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
பாஜகவின கொள்கையை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியாயப்படுத்துகிறார் என்றால் அவர் அதிமுகவின் இனை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறாரா? அல்லது பாஜகவின் செய்தி தொடர்பாளராக? என்ற கேள்வி எழுகிறது.
அதாவது பாஜக அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகி போனாலும், பாஜகவின் தயவில் தான் அதிமுக இருக்கிறது என காட்டிக்கொள்ளும் வகையில் அதிமுகவின் தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அது உள்ளபடியே வேடிக்கையாக இருக்கிறது.”
எனத் தெரிவித்துள்ளார்.