படவுன்:
உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் படவுன் மற்றும் ஷாஜஹான்பூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
அவர்கள் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.200 ஐ தாண்டும்.
ஏழைகள் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், அவர்களுக்கு (ஏழைகளுக்கு) மோட்டார் சைக்கிள் அல்லது கார் கூட சொந்தமாக இல்லை.
பா.ஜ.க.வின் சிறிய தலைவர்கள் சிறு பொய்களை சொல்கிறார்கள், பெரிய தலைவர்கள் பெரிய பொய்களை சொல்கிறார்கள், அவர்களின் முக்கிய தலைவர் மிகப் பெரிய பொய்களை கூறுகிறார்கள். பாஜக பொய்யர்களின் கட்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்… பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுபவர்களில் 521 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்