தங்கவயல் : தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் முதல், ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கம் வரையிலான, 3 கி.மீ., டபுள் ரோடு மற்றும் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணிகள் அரைகுறையாக நடந்து, 18 ஆண்டுகள் ஆகி விட்டன. இதை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பத்து கோடி ரூபாய் செலவில் உருவான இந்த சாலை, பல்வேறு போராட்டங்கள், நெருக்கடிகளை சந்தித்தது.
இச்சாலை எங்களின் சாதனையென, இரண்டு தேசியக் கட்சிகளும் தலையில் துாக்கி கொண்டாடின.இந்த சாலைக்காக, சாமிநாதபுரம், அசோகா நகரில் பல வீடுகள், கடைகள் இடித்து தள்ளப்பட்டன; ஏழைகள் பலர் தெருவுக்கு வந்தனர்.பணக்காரர்கள் மட்டும் நீதிமன்றம் சென்று, கட்டடங்களை இடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.கோலார் மாவட்ட கலெக்டர், பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சாலையை அகலப்படுத்தவும் கால்வாய் அமைக்கவும், 3 அடி நிலமும், கால்வாயை மூடிவிட்டு அதையே நடைபாதையாக்கவும் ஒப்புக்கொண்டனர்.எப்படியோ, 18 ஆண்டு கால பிரச்னை தீர்ந்தால் சரியென, அச்சாலையில் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சமாதானம் அடைந்தனர்.இச்சாலையில் அமைத்த நடைபாதை எங்கே என தேட வேண்டும். புல், பூண்டு செடிகள் முளைத்து நடைபாதையை காணவில்லை. இதற்காகவா இந்த பில்டப் போராட்டங்கள்?அசோகா நகர் முதல் காந்தி சதுக்கம் வரையிலான சாலையில், நடைபாதை தென்படவில்லை. கட்டட கழிவுகள் கூட இன்னும் அகற்றப்படவில்லை.டபுள் ரோட்டின் மைய பகுதியில், மின் விளக்கு கம்பங்கள் அமைக்க துவங்கி, அதனை மறந்து விட்டனர்.இந்த பி.எம்., சாலை மேம்பாட்டுக்கு, அரசு 10 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement