கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் எனக் கூறி செம்பு குடத்தை விலை பேசி விற்க முயன்ற தம்பதி போலீசில் சிக்கியுள்ளது.
சிவசங்கர் – ஸ்ரீதேவி என்ற அந்த தம்பதி, தங்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை நம்பிய பன்னீர்செல்வமும், செலவு இல்லாமல் இரிடியத்தை பெற நினைத்து, அந்த இரிடியத்தை திருட திட்டம் தீட்டி, மூன்று பேரை அழைத்துக் கொண்டு தம்பதியின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
தம்பதியின் வீட்டுக்கு வந்த அவர்கள் இரிடியம் என நினைத்து செம்பு குடத்தை திருடிக் கொண்டு சென்ற நிலையில், பன்னீர்செல்வத்தை பிடிக்க நினைத்த அந்த தம்பதி, வீட்டுக்கு வந்த கும்பல், ஐந்தரை சவரன் நகையையும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிவிட்டுச் சென்றதாக புகாரளித்துள்ளனர்.
போலீசார் விசாரணையில் செம்பு குடத்தை இரிடியம் எனக் கூறி விற்க முயன்ற தம்பதி போலீசில் சிக்கிய நிலையில், இரிடியம் என நினைத்து திட்டம் தீட்டி செம்பு குடத்தை திருடிச் சென்று ஏமாந்து போன கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.