வரியை எப்படி தவிர்க்கலாம்.. வீடு விற்பனை செய்வோருக்கு நிபுணர்களின் பலே ஐடியா..!

ஒரு சொத்தினை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு நாம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக இந்த வரி விகிதமானது இரு வகையில் இருக்கும்.

ஒன்று குறுகிய கால மூலதன ஆதாய வரி (STGS), இரண்டாவது நீண்டகால மூலதன ஆதாய வரி (LTGS).

நீங்கள் குறுகிய காலத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு தான் இந்த குறுகிய கால மூலதன ஆதாய வரியை செலுத்துவீர்கள். இதே நீண்டகாலம் கழித்து கிடைக்கும் வருமானத்திற்கு நீண்டகால மூலதன ஆதாய வரியினை செலுத்துவீர்கள்.

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்.. இது உலகளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்..!

எப்போது என்ன வரி?

எப்போது என்ன வரி?

உதாரணத்திற்கு ஒரு வீட்டினை வாங்கி 2 வருடத்திற்குள் விற்பனை செய்தால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியினை செலுத்த வேண்டியிருக்கும். இது வழக்கமாக ஆண்டுக்கு ஆண்டு வருமான வரி தாக்கல் செய்யும்போது, வரி செலுத்தும்போது செலுத்தினால் போதுமானது. இதுவே இரண்டு வரும் கழித்து விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபத்துக்கு நீண்டகால மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு 20% வரி செலுத்த வேண்டியிருக்கும்.

எப்படி கணக்கிடுவது?

எப்படி கணக்கிடுவது?

சாதரணமாக ஒரு வீட்டினை வாங்கி, அதனை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தினை தான் வருமானமாக கருதுவோம். அதன் படி ஆனால் இது குறுகிய கால ஆதாய வரிக்கு பொருந்தும். இது நீண்டகால ஆதாய வரி பயன்படாது.

நீண்டகால மூலதன ஆதாயம் கணக்கீடு
 

நீண்டகால மூலதன ஆதாயம் கணக்கீடு

ஏனெனில் இந்த LTCG-யை கணக்கிட index method பயன்படுகின்றது. இது பணவீக்கம் உயரும்போது அதற்கேற்ப, இன்டெக்ஸ் மதிப்பானது மாறும். இதனை வைத்து தான் நீண்டகால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படுகின்றது.

உதாரணத்திற்கு ஒருவர் மே 2010ல் – ரூ.36 லட்சம் மதிப்பிலான வீட்டினை வாங்கியுள்ளார்.

மே 2021ல் அதனை – ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.

இவருக்கு கிடைத்த லாபம் – ரூ.34 லட்சம். எனினும் இந்த லாபம் பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது இது குறையும்.

LTCG எப்படி கணக்கிடப்படுகின்றது?

LTCG எப்படி கணக்கிடப்படுகின்றது?

indexed cost of acquisition (தற்போதைய வீட்டின் விலை)= buying price *CII for year of sale/CII for the year of purchase

(cost inflation index – CII)

= buying price*CII for may 202/CII for may 2020

=36,00,000*301/167= 64,84,622.75

ஆக இது தான் அவரது வீட்டின் தற்போதைய மதிப்பு – ரூ.64,84,623

LTCG = buying price – index cost of acquition

= 70,00,000 – 64,88,623 = 5,11,377

ஆக அவருக்கு கிடைத்த லாபம் ரூ.5,11,377 (இதில் வீடு விற்பனை செய்ய கமிஷன், வீட்டுக்கு வேறு ஏதேனும் செலவு செய்திருந்தால் அதனையும் இதில் கழித்துக் கொள்ளலாம்.)

எவ்வளவு வரி செலுத்தணும்?

எவ்வளவு வரி செலுத்தணும்?

LTCG tax= 20% of LTCG

=20/100*5,11,377

= ரூ.1,02,275

ஆக பயனர் 5,11,377 ரூபாய் லாபத்திற்கு = ரூ.1,02,275 வரி செலுத்த வேண்டியிருக்கும்.

பிரிவு 54: இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரிவு 54: இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரிவு 54ன் கீழ் ஒரு வீட்டினை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி விலக்கு கோரலாம். இதே வீடு அல்லாமல் வேறு ஏதேனும் சொத்து எனில் அதற்கு 54 எஃப் – ன் கீழ் வரி விலக்கு கோரலாம். இதில் பிரிவு 54 – னினை நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நீங்கள் பழைய வீட்டினை விற்பனை செய்து கிடைக்கும் லாபத்தின் மூலம், மற்றொரு புதிய வீட்டினை வாங்கினால் அல்லது கட்டினால் 54 பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவர். எனினும் இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு.

இப்படி கூட விலக்கு பெறலாம்

இப்படி கூட விலக்கு பெறலாம்

நான் வீடு கட்டவோ வாங்கவோ விரும்பவில்லை, எனக்கு வரியை மிச்சப்படுத்த வேறு வாய்ப்பு உண்டா? எனில் நிச்சயம் உண்டு.

அது 54EC பிரிவின் கீழ் ஆறு மாதங்களுக்குள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பத்திரங்களில், மூலதன ஆதாயங்கள் முதலீடு செய்யப்பட்டால், நீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து 50 லட்சம் ரூபாய் வரையில் விலக்கு பெறலாம். எனினும் இதில் முதலீடு செய்த தொகையை 5 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்க கூடாது. அதோடு அந்த நிதியாண்டின் இறுதிக்குள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

டெபாசிட்டும் செய்யலாம்

டெபாசிட்டும் செய்யலாம்

பொதுத்துறை வங்கிகளில் உள்ள capital gains Account scheme 1988-ன்கீழ் டெபாசிட் செய்யலாம். இதன் மூலமும் வரி விலக்கு பெற முடியும். எப்படியிருப்பினும் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tax வரி

English summary

is it taxable if you sell your house? how to avoid taxes?

is it taxable if you sell your house? how to avoid taxes?/வருமான வரியை எப்படி மிச்சப்படுத்தலாம்.. வீடு விற்பனை செய்வோருக்கு நிபுணர்களின் பலே ஐடியா..!

Story first published: Sunday, February 13, 2022, 18:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.