moringa leaves chutney recipe in tamil: தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த அற்புத உணவுகளுடன் சுவையான சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். குறிப்பாக, தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகள் ரொம்பவே டெஸ்டியாக இருக்கும்.
ஆனால், இந்த சட்னிகள் நம்முடைய வீடுகளில் அடிக்கடி தயார் செய்யப்படுவையாக உள்ளன. இவற்றுக்கு மாற்றாக நீங்கள் ஒரு சட்னியை முயற்சிக்க வேண்டுமானால், இந்த ஹெல்த்தி சட்னியான முருங்கைக்கீரை சட்னியை முயற்சிக்கலாம். இவற்றை தாயார் செய்வது மிகவும் எளிமையான ஒன்றாகும். அதுவும் 5 நிமிடத்திலே அசத்தலாக செய்து விடலாம்.
சரி, இப்போது ஹெல்த்தியான முருங்கைக்கீரை சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
‘முருங்கைக் கீரை சட்னி’ செய்யத் தேவையான பொருட்கள் பின்வருமாறு:
முருங்கைக்கீரை – ஒரு கப்
வர மிளகாய் – 6
உடைத்த கடலை – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய்
புளி – நெல்லி அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – கால் டீஸ்பூன்
முருங்கைக் கீரை சட்னி சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு கப் முருங்கைக் கீரையை நன்கு தண்ணீரில் அலசி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இதன்பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வர மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்கவும்.
இவற்றை தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
பின்னர், அதே எண்ணெயில் முருங்கைக் கீரையை சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காயை பொடியாக நறுக்கி மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து முன்னர் வறுத்து வைத்துள்ள மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, பொட்டுகடலை மற்றும் முருங்கை கீரையை சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் புளி அல்லது எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்த தாளிப்பை இவற்றுடன் சேர்க்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த சுவையான மற்றும் ஹெல்த்தியான முருங்கைக் கீரை சட்னி தயாராக இருக்கும். இந்த அற்புத சட்னியை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“