பொதுத்தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. 10ஆம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு 9ஆம் தேதி முதல் 15 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 4 வரையும் நடத்தப்படுகிறது.
இதேபோல் 12 ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு 9 ஆம் தேதி தொடங்கி 16 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதியும் முடிகிறது
அந்த வகையில், நாளை 10 ஆம் வகுப்புக்கு அறிவியில் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 12 ஆம் வகுப்பிற்கு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் நடைபெறவுள்ளது.
இந்த சூழ்நிலையில, இரண்டு தேர்வுக்கான வினாத்தாளும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத்தில் லீக் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, திருவண்ணாமலை பள்ளிகளில் ஏதெனும் ஒன்றில்,10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டு லீக் ஆனதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வு நடைபெற்றாலும், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பிரிண்ட் செய்யப்படுவதால், லீக் ஆகும் சம்பவங்கள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளத்தில் வினாத்தாள்கள் பரவி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை பகிரும் கல்வி ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளிக் கல்வித் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.