அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும், உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதில் பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.