உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வகின்றது.
உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு பல நாடுகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன.
தற்போது உக்ரேனில் சுமார் 40 இலங்கையர்கள் இருக்கின்றனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள். அவர்கள் தற்போது எவ்வித பிரச்சினையுமின்றி அந்நாட்டில் தங்கியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரேனில் இலங்கைக்கான தூதரககம் ஒன்று காணப்படாவிட்டாலும்கூடஇ தற்போது துருக்கியின் அங்காராவில் உள்ள தூதரகத்தின் ஊடாக அதன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன்படி, அவசரநிலை ஏற்படுமிடத்து, இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.