உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.20 கோடியாக அதிகரித்துள்ளது.
சீனாவின் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில், மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றது.
இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், இந்த வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.
இதற்கமைய, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 20 இலட்சத்து 76 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 36 இலட்சத்து 67 ஆயிரத்து 911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 25 இலட்சத்து 75 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 இலட்சத்து 33 ஆயிரத்து 903 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.