கொல்கத்தா:
மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் சந்திப்பு டெல்லிக்கு வெளியே நடைபெறும் என்று
மம்தா பானர்ஜி உடனான தொலைபேசி உரையாடலுக்கு பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு பிராந்திய கட்சியும் காங்கிரசுடன் நல்லுறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை.காங்கிரஸ் கட்சி அதன் வழியில் செல்லும், நாங்கள் எங்கள் வழியில் செல்வோம் என்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை ஒன்றிணையுமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸும் இடதுசாரிகளும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுலின் கசப்பான போட்டியாளர்களாக உள்ளனர். இது தேசிய அளவில் ஒருங்கிணையும் முயற்சிகளைத் தடுப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்…
வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்- பஞ்சாப் மாநிலத்தில் மோடி பிரசாரம்