நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று, அதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது. மத்திய அரசின் இந்த முடிவுகக்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனாலும்
எல்ஐசி
பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில் அனுமதி அளித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி, தமது நாடாளுமன்ற பட்ஜெட் உரையின்போது, எல்ஐசி பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன்
அறிவித்திருந்தார்.
அவரகு அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதை போல, எல்ஐசி பங்குகளை சந்தையில் விற்பனை செய்வதற்கான அனுமதியை பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் (
செபி
) மத்திய அரசு கோரி வரைவு விண்ணப்பத்தை அளித்துள்ளது.
முதல்கட்டமாக, எல்ஐசியின் 5% பங்குகளை விற்பனை செய்யவும், அதன் மூலம் 63 ஆயிரம் கோடி வரை நிதி திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.