ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் நியமனம் <!– ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக துருக்கி ஏர்… –>

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராகத் துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் விலைக்கு வாங்கியது. இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகத்தை ஜனவரி 27ஆம் நாள் டாட்டா குழுமம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இன்று ஏர் இந்தியா இயக்குநரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் டாட்டா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஏர் இந்தியாவின் புதிய மேலாண் இயக்குநராக இல்கர் ஐசியை நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இதற்கு முன் துருக்கி ஏர்லைன்சின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.