தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஒருபுறம் கட்டுக்கோப்பாக நடத்தி வர, இன்னொருபுறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். நாள்தோறும் விதவிதமான முறையில் ஓட்டு கேட்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்,
“பிச்சைக்காரன் ரெண்டு வகை, காசு கேட்டு ஒருத்தன் பிச்சை எடுப்பான். அவன் ஒரு ரகம், நாங்க ஓட்டு கேட்டு பிச்சை எடுக்குறோம் நாங்க ஒரு ரகம். ஆனா ரெண்டு பேருமே பிச்சைக்காரன் தான். அவன் ஐயா… அம்மா காசு போடுங்கன்னு சொல்றான். நாங்க ஐயா… அம்மா ஓட்டு போடுங்கன்னு கேக்குறோம்” என நகைச்சுவையாகப் பேசினார்.
வரும் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு என்பதால், பிப்ரவரி 17-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நம்பிக்கை நட்சத்திரங்களாகக் களம்காணும் திருநங்கைகள்!