கனடாவில் இளம்பெண்ணிடம் வழி கேட்ட நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7ஆம் திகதி ரொறன்ரோவின் ப்ளோர் தெரு வடக்கு மற்றும் மடிசன் அவென்யூவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் நடந்ததை விவரித்துள்ளனர்.
அதன்படி அன்றைய தினம் 23 வயதான இளம்பெண் இரவு 9 மணிக்கு சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது புகைப்படத்தில் உள்ள நபர் அப்பெண்ணை அணுகி விலாசம் ஒன்றை காட்டி வழிகேட்டார்.
அந்த சமயத்தில் திடீரென வழி சொன்ன பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார் அவர்.
பின்னர் அப்பெண் கத்தியதால் அவர் அங்கிருந்து ஓடியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
அவர் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் 140 பவுண்ட் வரை எடை கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் விண்டர் ஜாக்கெட், லைட் டிராக் பேண்ட் அணிந்திருந்தார் எனவும் கருப்பு பையை கையில் வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.