கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காகித நகர் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஹிஸ்புல்லாஹ் நான்காம் குறுக்கு வீதி வடிகான் அமைப்பு வேலைத்திட்ட பணிகள் மீண்டும் அரம்பிக்கப்பட்டுள்ளன.
உலக வங்கியின் 4.17 மில்லியன் ரூபா கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் நான்காம் குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள 176.7 மீட்டர் நீளமுடைய இவ்வடிகான் அமைப்பு வேலைத்திட்டமானது கேள்வி மனுவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் இரு ஒப்பந்தக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டமையினால் சுமார் ஒரு வருட காலமாக இது இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த வேலைத்திட்ட பணிகளை தவிசாளர் மற்றும் வட்டார பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டா என்பது குறிப்பிடத்தக்கது.