சீனாவின் பிரபலமான 54 ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
முன்னதாக சீனாவின் பிரபலமான டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட பல ஆப்களுக்கு, இந்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் 54 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது. இது பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்பி HD, கேம்கார்ட் , விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் Xriver, onmyoji,ஆன்மியோஜி செஸ், ஆன்மியோஜி அரீனா, ஆப்லொஜி அரங்கம் உள்ளிட்ட பல ஆப்கள் இதில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனா உடன் கைகோர்க்க ரஷ்யா முடிவு.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டம்..!
சீனாவுக்கு செல்லும் தரவுகள்
இது தகவல் மற்றும் தொழில் நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் அமைச்சகம் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இந்த ஆப்களின் சர்வர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தாலும், சேகரிக்கப்படும் தரவுகள் சீனாவுக்கு அனுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனா – இந்தியா பிரச்சனை
லடாக் எல்லையில் சீனா – இந்திய வீரர்களுக்கு இடையாயான பதற்றத்தின் மத்தியில், இந்தியா 59 பிரபலமான ஆப்களை தடை செய்தத்து. அதன் பிறகு மீண்டும் தடை செய்யப்பட்டது சேர்த்தும் மொத்தம் ஜூன் 2020க்கு பிறகு 224 சீன ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
மாற்று வழிகளில் டவுன்லோட்
இந்த ஆப்கள் பலவும் பிளே ஸ்டோரில் ஏற்கனவே தடை செய்யப்பட்டவையாகும். எனினும் இதனை APK பைல்ஸ் ஆக மாற்று வழிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு தற்போது மீண்டும் இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.
ஏற்கனவே தடை செய்யப்பட்டவை
ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஆப்கள் மீண்டும் வேறு வேறு பெயர்களில், அதே போன்ற தடை செய்யப்பட்ட ஆப்கள் போலவே உருவாக்கப்பட்டுள்ள. ஆக தற்போது தடை செய்யப்பட்டுள்ளது இந்த 54 ஆப்களும் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை தான் என்றும் அறிக்கைகள் வெளீயாகியுள்ளது.
India bans 54 Chinese apps due to security threats
India bans 54 Chinese apps due to security threats/சீனாவின் 54 ஆப்களுக்கு தடை.. பாதுகாப்பு அச்சுறுத்தல் தான் என பரபர குற்றச்சாட்டு..!