மத்திய அரசால் நிர்வாகம் செய்ய முடியாமல் டாடா குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தைச் சந்திரசேகரன் தலைமையிலான டாடா நிர்வாக குழு கைப்பற்றிய நாளில் இருந்து படிப்படியாக மேம்படுத்தி வந்தது.
ஆனால் ஏர் இந்தியா தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி இல்லாமல் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. டாடா புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியை ஏர் இந்தியாவைக் கைப்பற்றி அடுத்த சில நாட்களிலேயே துவங்கினாலும், மிகவும் சவாலாக இருந்த நிலையில் தாமதமாகி வந்தது.
3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!
இந்நிலையில் இன்று ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரை தேர்வு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இல்கர் அய்சி
டாடா சன்ஸ் பிப்ரவரி 14 தேதி (இன்று) துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இல்கர் அய்சி-யை ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக நியமித்து உள்ளது.

சந்திரசேகரன் இறுதி முடிவு
இல்கர் அய்சி-யின் நியமனத்தில் இறுதியான முடிவை எடுக்க ஏர் இந்தியா நிர்வாகக் குழு இன்று கூடியது. இக்கூட்டத்திற்கு டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா நிர்வாகக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பின்பு அய்சியின் நியமனத்துக்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.

யார் இந்த இல்கர் அய்சி
ஏப்ரல் 2015 இல் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக நியமிக்கப்பட்ட அய்சி, 2022 ஜனவரி இறுதியில் பதவியை ராஜினாமா செய்தார்.
அய்சி 1994 இல் தற்போது துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் தயிப் எர்டோகனின் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இல்கர் அய்சி 2018ல் திருமணம் செய்து கொண்ட போது ரெசெப் தயிப் எர்டோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

துருக்கி ஏர்லைன்ஸ்
துருக்கிய ஏர்லைன்ஸ் ஒரு காலத்தில் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ந்து வரும் ஸ்டார் நிறுவனமாக இருந்தது, ஆனால் சமீபத்திய காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சனைகளில் சிக்கித்தவித்து வருகிறது.
மேலும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது இல்கர் அய்சி தான்.

புதிய சகாப்தம்
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இல்கர் அய்சியின் நியமனம் குறித்து டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், அய்சியின் தலைமையில் ஏர் இந்தியா ஒரு புதிய சகாப்தத்திற்கு செல்லும் என நம்புவதாகக் கூறினார்.
மேலும் டாடா சன்ஸ் தலைவராக பணிக்காலம் நீட்டிப்புக்கு பின்பு சந்திரசேகரன் எடுத்த மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான முடிவு இல்கர் அய்சியின் நியமனம் தான்.

துருக்கி ஏர்லைன்ஸ் வெற்றி
மேலும் இல்கர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய வெற்றிக்கு வழிவகுத்த முக்கியமான அதிகாரி. மேலும் இவர் விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியமான தலைவர் ஆவார் எனவும் என்.சந்திரசேகரன் கூறினார்.

கல்வி
51 வயதான ஆய்சி 1994ஆம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றார். 1995 இல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். 1997 இல் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள மர்மாரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை படிப்பை முடித்தார்.

முக்கிய பதவிகள்
அய்சி துருக்கி கால்பந்து கூட்டமைப்பு, துருக்கி ஏர்லைன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டிஎஃப்எஃப் ஸ்போர்டிஃப் அனோனிம் சிர்கெட்டி மற்றும் கனேடிய துருக்கிய வணிக கவுன்சிலின் உறுப்பினர் மற்றும் அமெரிக்க-துருக்கி வணிக கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார்.

பெரிய சவால்
ஏர் இந்தியாவின் சிஇஓ-வாக இருப்பது சாதாரணக் காரியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், பட்ஜெட் விலையில் பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் லாபகரமான வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவால் தான்.

3 நிறுவனம்
அதேவேளையில் டாடா குழுமத்தில் ஏற்கனவே இருக்கும் ஏர் ஏசியா இந்தியா (விரைவில் ஏர் இந்தியா உடன் இணைய உள்ளது), விஸ்தாரா உடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை மீண்டும் ஏர் இந்தியாவை மாகராஜா-வாக மாற்றும் முக்கியமான பொறுப்பு இல்கர் அய்சி-யிடம் தற்போது வந்துள்ளது.

வெளிநாட்டு அதிகாரி
சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் ஏற்கனவே வெளிநாட்டவர்-ஐ தான் ஏர் இந்தியாவின் சிஇஓவாக நியமிக்க வேண்டும் என முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இல்கர் அய்சி-ஐ நியமித்துச் சொன்னதைச் செய்துள்ளது டாடா குழுமம்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் அலெக்ஸ் குரூஸ்
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ன் 55 வயதான அலெக்ஸ் குரூஸ் அவர்களைத் தான் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது, ஆனால் கடைசியில் இல்கர் அய்சி-யை நியமித்து டிவிஸ்ட் கொடுத்துள்ளது டாடா குழுமம்.
Tata Sons named Ilker Ayci as New CEO & MD of Air India: New begninning started
Tata Sons named Ilker Ayci as New CEO & MD of Air India: New begninning started டிஸ்விட் கொடுத்த டாடா.. இவர் தான் ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ-வாம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!