டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் அங்கு ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும், உர விலையை கட்டுப்படுத்த வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தச் டெல்லி சென்றுள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியிலிருந்து டெல்லி சென்ற விவசாயிகள், ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களை, ரயில் நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ரயில் நிலையத்துக்குள் அமர்ந்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM