திடக்கழிவுகளை திறம்பட அகற்றுவதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறியதற்காக, தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு விதித்து’ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக, திருநீர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள்’ அடையாறு ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு வந்தது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 40,000 மக்கள் வசிக்கும் திருநீர்மலையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் ஒன்பது டன் கழிவுகள் உருவாகின்றன. இதில், ஒரு டன் கழிவு மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது, மேலும் இரண்டு டன் உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை நீர்நிலைகளுக்கு அருகில் கொட்டப்படுகின்றன.
இது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதால், 2016 ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டலத்தை அணுகினர், இது அங்கு கழிவுகளை கொட்ட வேண்டாம் என்றும், குவிந்துள்ள கழிவுகளை அறிவியல் முறைகளைப் பின்பற்றி அகற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து’ திருநீர்மலை டவுன் பஞ்சாயத்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, குவிந்து கிடக்கும் கழிவுகளை’ பயோமின் செய்ய முயற்சித்தது. பயோமினிங் என்பது பழைய டம்ப் யார்டு பொருட்களை உயிர்-உயிரினங்களைப் பயன்படுத்தி’ மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளங்களாக மாற்றும் செயல்முறையாகும்.
திருநீர்மலையில் கொட்டப்பட்ட 8,600 கன மீட்டர் கழிவுகளை அகற்ற, 78 லட்சம் ரூபாயை, நான்கு ஆண்டுகளுக்கு முன், மாநில அரசு அனுமதித்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம், உள்ளாட்சி அமைப்பு இன்னும் 58% மரபு கழிவுகளை அகற்றவில்லை என்று கூறியது.
உள்ளாட்சி அமைப்பு, கழிவுகளை பதப்படுத்தும் பணியை விரைவுபடுத்துவதாக கூறி, நிலத்தில் கசிவு மற்றும் ஆற்றில் கலப்பதை தடுக்க, சுற்றுச்சுவர், சிமென்ட் தளங்கள் கட்டப்பட்டது.
இந்தப் பின்னணியில், பயோமைனிங்கை முடிப்பதற்கான காலக்கெடு மார்ச் 2021 என தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்ணயித்தது.
பிறகு’ செப்டம்பர் 2021 இல்’ தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), தளத்தை ஆய்வு செய்தபோது, குப்பைகளை அகற்றும் செயல்முறை முழுமையாக நிறைவடையவில்லை.
டவுன் பஞ்சாயத்து’ அந்த இடத்தின் பின்பகுதியில் கழிவுகளை கொட்டியதாக வாரியம் தீர்ப்பாயத்தில் சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயனற்ற கழிவுகளை கொட்டி’ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததற்காக இழப்பீடாக 21 லட்சம் வழங்க பரிந்துரைத்தது.
தற்போது திருநீர்மலை நகர பஞ்சாயத்தை உள்ளடக்கிய தாம்பரம் மாநகராட்சி’ இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான’ பிப்ரவரி 24ம் தேதிக்குள் தொகையை செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“