படப்பிடிப்பில் விஷால் காயம்: லத்தி படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பு

படப்பிடிப்பில் விஷால் காயம்: லத்தி படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பு

படப்பிடிப்பில் விஷால் காயம்: லத்தி படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பு

2/14/2022 3:48:49 PM

விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 55 நாட்களுக்கும் மேலாக இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் இடம் பெறும் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு  குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுது ‘மிஸ்’ ஆனதால் காங்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது. சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படபிடிப்பை தொடர்ந்தார். அடிபட்டதையும் பொருட் படுத்தாமல்  மீண்டும் படபிடிப்பிலும் கலந்து கொண்டார்.

கை வலியுடன் படபிடிப்பில் கலந்து கொண்ட  அவருக்கு மேலும் படபிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. அதனால், முதலில் கைக்கு டிரீட்மெண்ட் எடுத்துகொள்ளலாம். பிறகு படபிடிப்பை தொடரலாம் என, ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ரமணா, நந்தா முடிவு செய்தார்கள்.  அதனால் கேரளாவுக்கு சென்று விஷால் டிரீட்மெண்ட் எடுக்கிறார். முழுக்க சுகமானதும் மீண்டும் மார்ச் மாதம் படபிடிப்பு  தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.