முசாபிரால் ஐஸ்வர்யாவுக்கு நிம்மதி: ஆனால் ரஜினிக்கு இல்லையே

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். மனைவியை பிரிந்த கையோடு தன் கவனத்தை திசை திருப்ப வாத்தி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்
தனுஷ்
.

ஐஸ்வர்யாவும் சும்மா இல்லை.
முசாபிர்
எனும் காதல் வீடியோவை இயக்க ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டார். அந்த வீடியோவை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பெரிய நடிகரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதல் தான் இந்த முசாபிர்.

காதலை திரையில் காட்டுவதில் ஐஸ்வர்யா கில்லாடி. அதனால் முசாபிர் வீடியோ நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. காதலர் தின ஸ்பெஷலாக முசாபிர் இன்று வெளியிடப்படுகிறது.

விவாகரத்தால் வந்த வினை: இனி ஐஸ்வர்யா இல்ல சவுந்தர்யா தான்
கணவரை பிரிந்த கவலையை கொஞ்சம் மறந்து, நிம்மதி பெற முசாபிர் வீடியோ வேலை ஐஸ்வர்யாவுக்கு உதவி செய்திருக்கிறது. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

ஐஸ்வர்யா விரைவில் படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நம்ப முடியாது.

இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.