இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் சில்லறை பணவீக்கம் ஜனவரி 2022ல் ஆறு மாத உச்ச அளவான 6.01 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் 2021ல் 5.59 சதவீதமாக இருந்தது, இது ஐந்து மாத உயர்வாகும், அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 6 மாத உயர்வை எட்டியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட தொடர் உயர்வின் காரணமாக ரீடைல் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. உணவுப் பணவீக்கம் 2021 டிசம்பர் மாதம் 4.05 சதவீதமாக இருந்த நிலையில் ஜனவரி மாதம் 5.43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரீடைல் பணவீக்கம் அதிகப்படியாக 6.60 சதவீதமாக உயர்ந்த நிலையில், 6 மாதத்திற்குப் பின் முதல் முறையாக 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி அளவுகள் ரிசர்வை வங்கியின் பணவீக்க அளவீடுகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரீடைல் பணவீக்க உயர்வுக்கு உணவுப் பொருட்கள் முக்கியக் காரணமாக இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜனவரி மாதம் தானியங்கள், முட்டை, பால் விலை அதிகரித்துள்ளது என்பது மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட நுகர்வோர் விலை குறியீடு தரவுகள் கூறுகிறது.
இதேபோல் டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜனவரி மாதம் மசாலா பொருட்கள், தயாரிக்கப்பட்ட உணவு, ஆடை, காலணி, வீட்டு உபயோக பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் கல்வி, ஹெல்த்கேர், போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரித்துள்ளது மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகள் கூறுகிறது.
மேலும் ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.56 சதவீதத்தில் இருந்து 12.96 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஆனாலும் இரட்டை இலக்கில் இருப்பது நாட்டின் வர்த்தகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பாக உள்ளது.
எரிபொருள், உலோகங்கள் மற்றும் கெமிக்கல் போன்ற பல்வேறு மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தி பொருட்களின் உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கில் உள்ளது.
Retail Inflation hits Highest In 6 Months
Retail Inflation hits Highest In 6 Months ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..!