இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர்.
இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும்
தனுஷ்
, ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான் என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். இருவரும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆர்யா வெளியிட்ட விஜய் ஆண்டனி பட டைட்டில் லுக்: டைட்டிலே வேற லெவல்ல இருக்கே..!
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் இறங்கினார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இந்த பாடலின் புரோமோ வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
View this post on Instagram A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush)
அன்கித் திவாரி இசையமைத்துள்ள ‘முசாபிர்’ பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இதன் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரியா வாரியாரின் லேட்டஸ்ட் வீடியோ!