உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையேயான போர் பதற்றம் என்பது பேரம் பேசுவதற்கான யுத்தமாகவே காணப்படுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உக்ரைன் – ரஸ்யா இடையேயான போரை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டால் 40 லட்சம் அகதிகள் வெளியேறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அகதிகள் தொடர்பான நெருக்கடி காரணமாக ஐரோப்பிய நாடுகள் இந்த போரை விரும்பவில்லை. மேலும் ரஸ்யா – உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மாற்று வியூகம் அமைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.