இந்திய சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் மொபைல் செயலிகளை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவைத் தொடர்ந்து 2020 ஜூன் மாதன் சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட சீன செயலிகள் இதில் அடங்கும். மேலும், செப்டம்பர் மாதத்தில் சீன செயலிகள் பப்ஜி உள்பட 118 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து ஒன்றிய அரசு அதிரடி காட்டியது. நிறுவனங்கள் தங்கள் தரப்பில் இருந்து விளக்கங்கள் அளித்த போதும், செயலிகள் மீதான தடை தொடரும் என அரசு உறுதியாக இருந்தது.
சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் – இதில் எந்த மெசஞ்சர் பாதுகாப்பானது?
இந்த சூழலில், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட 54 சீன செயலிகளுக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று தடை விதித்துள்ளது. தற்போது அலிபாபா, கரீனா பிரீ பையர், ஸ்வீட் செல்ஃபி, ப்யூட்டி கேமரா, செல்ஃபி கேமரா, விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் ஸ்ரைவர், ஆன்மையோஜி அரேனா, ஆப்லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசு அறிக்கையின் படி இதுவரை இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள 270 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 90% விழுக்காட்டுக்கும் அதிகமானவை சீன செயலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
delete google history: உங்கள் ரகசிய தகவல்களை கூகுள் சேமிக்கிறது! அதை அழிக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது தடை செய்யப்பட்டுள்ள முக்கிய சீன செயலிகள்
ஆலிபாபா – (Alibaba B2C portal)கரீனா பிரீ பையர் (Garena Free Fire)பியூட்டி கேமரா – ஸ்வீட் செல்பி (Beauty Camera-Sweet Selfie HD)பியூட்டி கேமரா – செல்ஃபி கேமரா (Beauty Camera – Selfie Camera)இக்வலைசர் & பேஸ் பூஸ்டர் (Equalizer & Bass Booster)கேம் கார்ட் சேல்ஸ் போர்ஸ் (CamCard for SalesForce)ஐசோலாண்ட் 2: ஆஷெஸ் ஆஃப் டைம் லைட் (Isoland 2: Ashes of Time Lite)விவா வீடியோ எடிட்டர் (Viva Video Editor)டென்செண்ட் சிரிவர் (Tencent Xriver)ஆன்ம்யோஜி செஸ் (Onmyoji Chess)ஆன்ம்யோஜி அரீனா (Onmyoji Arena)ஆப்லாக் (AppLock)டுவல் ஸ்பேஸ் லைட் (Dual Space Lite)
JioPages: இனி உங்களை டிராக் பண்ண முடியாது… வந்துவிட்டது இந்தியாவின் முதல் பாதுகாப்பான பிரவுசர்!
இந்த 54 சீன செயலிகளுக்கும் தடை விதிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை இந்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.