ஆணின் இதயம் அவளிடத்திலும், அவளது இதயம் ஆணின்னிடத்திலும் ஆரோக்கியமாக துடிக்கின்றனவா என உறுதிச்செய்துக்கொள்ளும் வருடாந்திர
இதய பரிசோதனைத்தான்
காதலர் தினம்
. சாதி, மதம், மொழி, இனம், நாடு என அனைத்தையும் கடந்தது காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அன்பை, காதல் இணையுடன் கொண்டாடி வருகிறனர். கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஒருவொருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொள்ளும் இந்த காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடி வருகிறது.
Valentines Gifts: இந்த காதலர் தின பரிசு போதும்… உங்க காதல் சக்சஸாக!
இந்த டூடுல் 2டி விளையாட்டு போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்ததும் இரண்டு வெள்ளை எலிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அடுத்த சில நொடிகளில் இரண்டு எலிகளும் தனித்தனியே இருக்கின்றன. அந்த இரண்டையும் ஒன்றாக சேர்ப்பதுதான் நமக்கு பணிக்கப்பட்ட வேலை. அதாவது பிரிந்திருக்கும் காதலை ஒன்று சேர்க்கும் உன்னதமான வேலையை கூகுள் பயனர்களுக்காக வெளியிட்டுள்ளது.
இன்று ‘GOOGLE’-இல் இடம்பெற்றுள்ள ‘O,G மற்றும் L’ ஆகிய மூன்று எழுத்துக்கள் தனித்தனியாக உள்ளன. அதை சேர்த்தால் அந்த எலிகளையும் ஒன்றாக சேர்த்து விடலாம். இரண்டும் சேர்த்த பிறகு ‘Happy Valentine’s Day’ என்ற வாழ்த்து திரையில் தோன்றுகிறது. அந்த எலிகளை சேர்த்து வைக்க கூகுள் பயனர்கள் விளையாடி வருகின்றனர். நீங்களும் கூகுளுடன் இணைந்து காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்.
காதலர் தின வரலாறு
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை வெளிப்படுத்த வேண்டும் என பல திட்டங்களை போடுவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் தொடங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Asus Rog Phone 5: வாத்தி கம்மிங்… கேமிங் போன் ராஜா இஸ் பேக்…
கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என கட்டளை இடப்பட்டது. ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலன்டைன் அரசனின் அறிவிப்பை மீறி ரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதனையறிந்த மன்னன் வாலன்டைனை கைது செய்ததோடு, அவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்றும் நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுடன் வாலன்டைன் காதல் வயப்பட்டார். ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தார். அப்போது தான் வாலன்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.
பழைய பணம்… நிறைய துட்டு – எப்படி சாத்தியம்?
இதே நேரத்தில் தான் வாலன்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ஆம் நாள் ஆகும். இந்த நாளே வாலன்டைன் தினம் அதாவது காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.