அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அது தொடர்பான வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தடையில்லை என்று உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு மாணவியின் தந்தை 4 வாரங்களில் பதில் மனு அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான தங்கள் விசாரணையை தொடங்கினார்கள்.
இந்த நிலையில், இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது. அதில், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ், குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.