தீபிகா படுகோன் சமீபத்தில் நடித்து வெளியான ‘Gehraiyaan’ அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கான ப்ரோமஷனுக்காக தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அல்லு அர்ஜுடன் பணியாற்ற விருப்பமாக உள்ளேன். வியக்கத்தக்க ஆளுமை அவர்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஷாரூக் கானுடன் பதான், ஹிருத்திக் ரோஷன் உடன் பையிட்டர், Intern ரீமேக், பிரபாஸ் உடன் ஒரு படம் என பிசியாக இருக்கும் தீபிகாவின் விருப்பப் பட்டியலில் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் உள்ளனர்.
தீபிகாவிற்கு முன்பே ஆலியா பட், அல்லு அர்ஜுடன் இணைந்து தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தார். “புஷ்பா படத்திற்கு பிறகு எங்க வீட்டில் எல்லோரும் அல்லு அர்ஜுனின் ரசிகர்களாக மாறிவிட்டோம். அவர்கள் என்னிடம் கேட்டார்கள் எப்போது அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடிக்க போகிறாய் என. வீட்டில் என்னை ஆலு எனச் செல்லமாக கூப்பிடுவார்கள். ‘ஆலு நீ எப்போ அல்லுவோடு நடிக்க போகிறாய்’ எனக் கேட்டார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்கிறார் ஆலியா பட். புஷ்பா ஹிந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் படங்களில் ஒன்றாக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.