இண்டர்நெட் முடங்கும் அபாயம்.. கூகுள், அமேசான், நெட்பிளிக்ஸ் பதற்றம்.. புதிய தலைவலி..!

இன்று உலகம் முழுவதும் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் பதற்றமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியக் காரணம் உலகம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இண்டர்நெட் முடங்கலாம், டெக் நிறுவனங்களின் சேவை முடங்கலாம் என்பதால் தான்.

இந்தப் பதற்றமான சூழ்நிலைக்கு முக்கியக் காரணம் உலகில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இருக்கும் அரிய பொருட்களில் ஒன்றான ஹீலியம் தான்.

2 நாளில் ரூ.12 லட்சம் கோடி காலி.. பாதாளம் நோக்கி சென்ற சென்செக்ஸ்.. இன்று நிலவரம் என்ன?

 ஹீலியம் இல்லை என்றால் என்ன..?!

ஹீலியம் இல்லை என்றால் என்ன..?!

ஹீலியம் இல்லையெனில் நெட்பிளிக்ஸ் மூலம் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் திரைப்படங்கள், வெப் சீரியஸ்களை ஸ்ட்ரீம் செய்ய முடியாது. கூகுள் நிறுவனத்தால் ஒரு நாளைக்கு 5.6 பில்லியன் தேடல்களை ஆதரிக்க முடியாது, மேலும் மில்லியன் கணக்கில் ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்-களை ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்க முடியாது.

 டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

இதனால் உலகளவில் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் எப்படியாவது ஹீலியம் அதிகளவில் பெற வேண்டும் என்ற போட்டியில் இறங்கியுள்ளது. ஹீலியத்திற்கு ஏன் இந்தத் திடீர் தட்டுப்பாடு..? என்ன நடந்தது…?

 அமெரிக்க நேஷ்னல் ஹீலியம் ரிசர்வ்
 

அமெரிக்க நேஷ்னல் ஹீலியம் ரிசர்வ்

ஹீலியம்-க்கு உலகின் மிகப்பெரிய ஆதாரமாக விளங்கிய, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ பகுதியில் இருக்கும் அமெரிக்க நேஷ்னல் ஹீலியம் ரிசர்வ்-ல் 70 வருடங்களுக்கும் அதிகமாக உற்பத்தி செய்த பின்பு ஹீலியம் இறுதியாக வறண்டு உள்ளது.

 ஹீலியம் பற்றாக்குறை

ஹீலியம் பற்றாக்குறை

இதனால் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஹீலியம் பற்றாக்குறை மூலம் ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறைக்கும் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. ஹீலியம் பிறந்தநாளின் போது பலூன்களை நிரப்புவதை விடப் பல இடத்திலும், பல இடங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

 20 வருடம் மட்டுமே

20 வருடம் மட்டுமே

டெக்சாஸ் பகுதியில் ஹீலியம் மொத்தமாகத் தீர்ந்து விட்ட நிலையில் தற்போதைய பயன்பாட்டின் அளவின் படி கணித்தால் அடுத்த 20 வருடத்திற்குத் தேவையான ஹீலியம் வாயு மட்டுமே போதுமானதாக இருக்கும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர். டெக்னாலஜியை அதிகம் நம்பி உலக நாடுகள் இயங்க துவங்கியுள்ள நிலையில் இந்த 20 வருட கணிப்பு மேலும் குறையலாம்.

 அவென்டி எனர்ஜி

அவென்டி எனர்ஜி

இந்தப் பற்றாக்குறையைத் தீர்க்க அவென்டி எனர்ஜி நிறுவனம் அமெரிக்கா- கனடா எல்லையில் சுமார் 70000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி ஹீலியம் வாயுவுக்கான உற்பத்தி பணிகளைத் துவங்கியுள்ளது. இப்பகுதியில் ஹீலியம் வாயுவுக்காகச் சுமார் 13 கிணறுகள் தோண்டப்பட்டு வருகிறது.

 100 மடங்கு விலை உயர்வு

100 மடங்கு விலை உயர்வு

ஹீலியம் வாயுவுக்குத் தற்போது இருக்கும் டிமாண்ட்-ஐ அவென்டி எனர்ஜி நிறுவனத்தின் திட்டம் மூலம் ஈடுசெய்யப்பட முடியும் எனக் கணிக்கப்படும் இதேவேளையில் அடுத்தச் சில வருடத்தில் ஹீலியம் வாயு விலை 100 மடங்கு அதிகரித்துக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு இணையாக மதிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இண்டர்நெட், டெலிகாம்

இண்டர்நெட், டெலிகாம்

ஹீலியம் வாயுக்கு எந்தப் பொருளையும் குளிரூட்டும் தன்மை உள்ளதால் அனைத்து சிப் பயன்பாட்டு தளத்திலும் ஹீலியம் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக டெலிகாம் துறையிலும், இண்டர்நெட் சேவை பிரிவிலும் ஹீலியம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 ஹீலியம் ஆதிக்கம்

ஹீலியம் ஆதிக்கம்

மருத்துவத் துறை – ஹீலியம் எம்ஆர்ஐ இயந்திரங்களை இயக்கவும் சுவாச சிகிச்சையில் முக்கியப் பகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கிரையோஜெனிக்ஸ் – ஒரு உலோகத்தை முழுமையாகப் பூஜ்ஜிய வெப்ப நிலைக்குக் கொண்டு வர உதவும் ஒரே தனிமம் ஹீலியம் மட்டுமே உள்ளது.

இண்டர்நெட் இணைப்பு – தூய்மையான ஹீலியம் படிமத்தில் தான் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் தயாரிக்க முடியும்.

எலக்ட்ரானிக்ஸ் – பல எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகன்டெக்டர் – மொபைல் போன்கள் உட்படப் பலவற்றின் உற்பத்தியில் பல்வேறு நிலைகளில் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் – ஹீலியம் நிரப்பப்பட்ட ஹார்ட் டிரைவ்கள் 23% குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி 50% அதிகச் சேமிப்புத் திறனை வழங்குகின்றன.

கார் ஏர் பேக்குகள் – கார்களில் இருக்கும் ஏர் பேகுகள் அனைத்தும் ஹீலியம் உதவியுடன் தான் உடனடியாகக் காற்றை நிரப்ப பயன்படுத்தப்படுகிறது.

 அமேசான், கூகுள் மற்றும் நெட்ஃபிக்ஸ்

அமேசான், கூகுள் மற்றும் நெட்ஃபிக்ஸ்

அமேசான், கூகுள் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் டேட்டா சென்டர்களைக் குளிர்விக்க ஹீலியம்-ஐ அதிகளவில் பயன்படுத்துகிறது. அமெரிக்க மற்றும் கனடா அரசாங்கங்கள் சமீபத்தில் ஹீலியத்தை அந்நாட்டின் முக்கியமான தாது பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Helium Shortage may Crash Internet soon; Google, Amazon and Netflix Are Fighting Overit

Helium Shortage may Crash Internet soon; Google, Amazon and Netflix Are Fighting Overit இண்டர்நெட் முடங்கும் அபாயம்.. கூகுள், அமேசான், நெட்பிளிக்ஸ் பதற்றம்.. ஹீலியம் மூலம் புதிய பிரச்சனை..!

Story first published: Tuesday, February 15, 2022, 15:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.