மாஸ்கோ: போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து, சில ரஷ்ய படைகள் முகாமுக்கு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேடோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால், அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க ரஷ்யா, உக்ரைனுடன், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், உக்ரைனில் எல்லையில் இருந்து சில ரஷ்ய படைகள் முகாமிற்கு திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்ட சில படைகள் தங்கள் பயிற்சியை முடித்த பின்னர் கிளம்புவதற்கு தயாராக உள்ளன. தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட ராணுவப்படைகள், தங்களது பணியை முடித்து விட்டு சாலை மற்றும் ரயில் மூலம் தங்களது முகாமிற்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement