ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது எந்த நேரத்தில் போர் வரலாம் என்ற பதற்றமான நிலையில் உள்ளது. இதற்கிடையில் உக்ரைன் எல்லையில் 1 லட்சம் படைகளுக்கு மேல் குவித்துள்ள ரஷ்யாவை, 48 மணி நேரத்திற்குள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என உக்ரைன் கெடு விதித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளை குவித்து வருவதாகவும், குண்டு வீச்சும் இருக்கலாம் என அமெரிக்க எச்சரித்துள்ளது.
இந்த பதற்றமான நிலைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை, உக்ரைனில் இருந்து வெளியேற கூறி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை இனி எப்படியிருக்கும்.. புட்டு புட்டு வைத்த நிபுணர்கள்..!
பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
குறிப்பாக ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் தூதரக அதிகாரிகாளையும் கூட வெளியேற்றியுள்ளன. ஆக இது இன்னும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தான் உக்ரைன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கும் உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார தடை
தொடர்ந்து இந்த பதற்றத்தினை தணிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜி7 நாடுகளும் எச்சரித்துள்ளன. இதனை ரஷ்யா செவி சாய்க்குமா? இந்த பிரச்சனை இனியாவது தணியுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
7 வருட உச்சத்தில் எண்ணெய்
இதற்கிடையில் கடந்த அமர்வில் கச்சா எண்ணெய் விலையானது 7வருட உச்சத்தினை எட்டியது. இது பேரலுக்கு 96 டாலர்களையும் கடந்தது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் கடந்த அமர்வில் 96.78 டாலர்களாக உச்சம் தொட்டது. ரஷ்யா சர்வதேச அளவில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தி செய்யும் ஒரு நாடாகவும். ஆக இங்கு ஒரு பிரச்சனை எனில் அது உலகம் முழுவதும் எதிரொலிக்கலாம். இதன் காரணமாகத் தான் கச்சா எண்ணெய் விலையானது 100 டாலர்களுக்கு அருகில் சென்றது.
WTI கச்சா எண்ணெய் விலை
தற்போது WTI கச்சா எண்ணெய் விலையானது 0.65% குறைந்து, 94.85 டாலர்களாக காணப்படுகின்றது. கடந்த அமர்வில் 95.46 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 94.83 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. .
பிரெண்ட் கச்சா எண்னெய் விலை
கடந்த அமர்வில் பலமான உச்சத்தினை எட்டிய பிரெண்ட் கச்சா எண்னெய் விலையானது, தற்போது 0.57% சரிவினைக் கண்டு, 95.91 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வில் 96.48 டாலராக முடிவுற்றது. இன்று காலை தொடக்கத்தில் 95.20 டாலராக தொடங்கியது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்றே குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிண்றது.
இந்திய சந்தையில் கச்சா எண்னெய் விலை
இந்திய சந்தையில் கச்சா எண்னெய் விலையானது பேரலுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 7172 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் 7108 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 7153 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது.இது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
சப்ளையை பாதிக்கலாம்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலையானது மேற்கொண்டு கச்சா எண்ணெய் சப்ளையினை பாதிக்கலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
Russia – Ukraine issue: crude oil prices hits 7 year highs
Russia – Ukraine issue: crude oil prices hits 7 year highs/உச்சம் தொடும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை..7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை..!