திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக மதரஸா பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஸ்வாலிஹ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியரை கைது செய்து காவலில் வைத்தனர்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 11க்கும் குறைவான வயதுடையவர்கள்.அந்த குழந்தைகளிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்… குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஐ.டி. பெண் ஊழியர் கற்பழிப்பு- காதலன் கைது