புதுடெல்லி:
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த, காப்பீடு செய்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ கொரோனா நிவாரண திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐசி) செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் 2022 மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஆனால் தற்போதுள்ள அனைத்தும் பயனாளிகளுக்கும் பயன்கள் தொடரும்.
இத்திட்டத்தின் கீழ், காப்பீடு செய்த இறந்த தொழிலாளியின் சராசரி சம்பளத்தில், 90 சதவீதம் தகுதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொரேனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த 12,309 பேருக்கு நிவாரண தொகை ரூ.34.15 கோடி வழங்கப்பட்டுள்ளதாகதொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் போது, 33 இஎஸ்ஐ மருத்துவமனைகள் 4,500 படுக்கைகள் மற்றும் 400 வென்டிலேட்டர்களுடன் கொரோனா பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப 50 மருத்துவமனைகளை, கொரோனா பிரத்யேக மருத்துவமனைகளாக மாற்றவும் இஎஸ்ஐசி தயாராக உள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…
தமிழகத்தில் மேலும் 1,325 பேருக்கு கொரோனா தொற்று- 14 பேர் உயிரிழப்பு