டெல்டா, ஒமைக்ரான், ஏபி2 என உருமாறி கொண்டே இருக்கும் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி டோஸ் 1, 2 என்பதை தாண்டி தற்போது பூஸ்டர் டோஸ் வரை வநதுவிட்டன.
இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் டோசின் செயல் திறன் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா பூஸ்டர் டோசின் செயல்திறன், ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்காவது மாதத்தில் கணிசமாக குறைந்து விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது இரண்டாவது மாதத்தில் 87 சதவீதமாக இருக்கும் பூஸ்டர் டோசின் செயல் திறன் நான்காவது மாதத்தில் 66 சதவீதமாக குறைந்து விடுலதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் திடீர் அறிவிப்பு!
இதேபோன்று, ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிரான ஒமைக்ரான் வைரசின் செயல்திறன் இரண்டு மாதங்களில் 91 சதவீதத்தில் இருந்து நான்காவது மாதத்தில் 78 சதவீதமாக குறைந்து விடுவதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
‘உடனே வெளியேறுங்க!’ – இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2.4 லட்சம் பேர் மற்றும் சாதாரண சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 93 ஆயிரம் பேரிடம் இந்த முக்கியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்க சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.