சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில்வசிப்பவர்களிடம் ரூ.88 கோடிவாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதில் குறிப்பாக கோயில் திருப்பணி, திருத்தேர், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பணியாளர்கள் நலத்திட்ட உதவி கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்புஉள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வாடகை நிலுவை ரூ.56,300, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோயிலில் வாடகை நிலுவை ரூ.3,58,540 உட்பட தமிழகம் முழுவதும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் மனைகளின் குத்தகை மற்றும் வாடகை நிலுவை தொகை ரூ.88 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
துணை நிற்க வேண்டும்
அதிகபட்ச நிலுவை உள்ளவர்களின் கடைகள் மட்டும் சீல் வைக்கப்படுவதால், தங்கள் நிலுவைகளை குறைத்து கொள்வதற்காக வாடகைதாரர்கள் வாடகை கட்டுவதில் தீவிரம் செலுத்துகின்றனர். எனவே, நிலுவைத் தொகைகளை உடனடியாகச் செலுத்தி கோயிலுக்கு வருவாயைப் பெருக்கு வதன் மூலம் கோயில் திருப்பணி மற்றும் வளர்ச்சிக்கு வாடகை மற்றும் குத்தகைதாரர்கள் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.