தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களாக சட்டசபையை முடக்கப்போவதாக கூறி வருகிறார். நான் உங்களை விட சிறியவன்தான் உங்களுக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் சட்டசபையை முடக்கித்தான் பாருங்களேன்
நடந்து முடிந்த தேர்தலில் 150க்கும் அதிகமான இடங்களில் ஜெயிச்ச நிலையில், இப்போ சட்டசபையை முடக்கி மீண்டும் தேர்தல் நடத்தினால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவை மக்கள் ஜெயிக்கவைச்சு காட்டுவாங்க. மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். பாஜக, அதிமுகவுக்கு தி.மு.க. சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது” என தெரிவித்தார்.
மேலும், ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடனாக்கி சென்ற எடப்பாடி அரசு நிதிநிலையில் தமிழகத்தை தவிக்கவிட்டு சென்ற நிலையிலும், கொரோனா நிவாரண நிதி் நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.