சமுதித்த சமரவிக்ரம சிரேஷ்ட ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.
பொலிஸ் மா அதிபரினால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன், 60 பொலிசாரை கொண்ட குழு ஒன்று CCTV காட்சிளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று (14) தனிப்பட்ட முறையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீட்டுக்கு தான் சென்றதாக குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்பு மிக்க அரசாங்கம் என்ற ரீதியில் தானும், அரசாங்கமும் ஊடக சுதந்திரத்தினை சரியாக புரிந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.