”நான் கடந்த 5 வருடங்களாக தென்னிந்தியத் இசைத்துறையில் பணியாற்றி வருகிறேன். வித்யாசாகர் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், ஜி.வி.பிரகாஷ், தமன் சார் மற்றும் பலருக்கு கீபோர்டு புரோகிராமராக இருந்திருக்கிறேன். இசையமைப்பாளராக இது எனது முதல் படம் என்பதில், நான் மிக உற்சாகமாக இருக்கிறேன். இப்படத்தின் திரைக்கதையை கேட்டபோது, பின்னணி இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன். அது இப்படத்தை ஒரு சிறந்த படைப்பாக கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். நான் முன்பே இந்த வகைத் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன், ஆனால், மற்ற இசையமைப்பாளர்களின் கீழ் தான் நான் பணியாற்றியிருக்கிறேன். இப்போது தான், முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் உள்ளன. விரைவில் அதற்கான ரெக்கார்டிங் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது” என்று கூறியுள்ளார்.
சிபிராஜ் படத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன்
இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘கபடதாறி’ படத்திற்குப் பிறகு ‘மாயோன்’, ‘ரங்கா’, ‘ரேஞ்சர்’, ‘வட்டம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் சிபிராஜ், அடுத்ததாக அறிமுக இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். ஐ.ஜி பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக கார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சிபிராஜின் 20-வது படமாக உருவாகும் இப்படம் குடும்பம் ப்ளஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஹர்ஷ வர்தன் பேசும்போது,