இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் தொடங்கி, பலமான வீழ்ச்சியிலேயே முடிவடைந்துள்ளன.
இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் எல்லையில் பதற்றமான நிலை நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் தான் அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் அனைத்தும் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளன. சர்வதேச நாடுகளின் பங்கு சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இந்திய சந்தையில் இருந்தும் முதலீடுகள் மிகப்பெரிய அளவில் வெளியேறிய நிலையில் தான், சந்தையானது பலத்த சரிவினைக் கண்டது.
1200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த வீழ்ச்சி..முதல் நாளே இப்படியா?

தொடக்கம் எப்படி?
இன்று காலை தொடக்கத்திலேயே சந்தைகள் பலத்த வீழ்ச்சியில் தான் தொடங்கின. குறிப்பாக சென்செக்ஸ் 1197.86 புள்ளிகள் குறைந்து, 56,955.06 புள்ளிகளாகவும், நிஃப்டி 348 புள்ளிகள் குறைந்து, 17,026.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 463 பங்குகள் ஏற்றத்திலும்,1989 பங்குகள் சரிவிலும், 100 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

முடிவு எப்படி?
இந்திய சந்தைகள் முடிவில் பெரும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 1747.08 புள்ளிகள் குறைந்து, 56,405.84 புள்ளிகளாகவும், நிஃப்டி 531.95 புள்ளிகள் குறைந்து, 17,026.80 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 574 பங்குகள் ஏற்றத்திலும்,2897 பங்குகள் சரிவிலும், 108 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் 5% மேலாக சரிவில் முடிவடைந்துள்ளது. இதே பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் 4% மேலாக சரிவிலும், நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக சரிவிலும், இதே நிஃப்டி பிஎஸ்இ,பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
இந்த பலமான வீழ்ச்சிக்கு மத்தியில் நிஃப்டி குறியீட்டில் உள்ள டிசிஎஸ் மட்டுமே டாப் கெயினரராகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டிலும் டிசிஎஸ் மட்டுமே டாப் கெயினராக உள்ளது. இதே டாடா ஸ்டீல்,ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

7 வருட உச்சத்தில் கச்சா விலை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் விலையானது 7 வருட உச்சத்தில் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம் என்ற நிலையில், இது பங்கு சந்தைகளில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Closing bell: sensex crashed 1700 points above, nifty ends below 16,850 amid ukraine – russia tensions
Closing bell: sensex crashed 1700 points above, nifty ends below 16,850 amid ukraine – russia tensions/1700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. நிஃப்டி 16,850 கீழ் முடிவு.. கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..!