புதுடில்லி :கடந்த ஜனவரியில், இந்தியாவின் ஏற்றுமதி, 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆபரணங்கள்
இந்தாண்டு ஜனவரியில் பொறியியல், பெட்ரோலியம், நவரத்தினங்கள் மற்றும் துறைகள் சிறப்பாக செயல்பட்டதால், ஏற்றுமதி, 25.28 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.அதே சமயம் இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி, 23.54 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 475 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியை விட இறக்குமதி உயர்ந்ததால், ஜனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை, 1 லட்சத்து 30 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில், ஏப்., -ஜன., வரை ஏற்றுமதி, 46.73 சதவீதம் உயர்ந்து, 25 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 17 லட்சத்து 16 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில் இறக்குமதி, 62.65 சதவீதம் உயர்ந்து, 37 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை, 11 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே, 10 மாத காலத்தில், 5 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement