டிஜிட்டல் உலகில் ஒரு துணையை கண்டுபிடிப்பது கடினமான காரியம் அல்ல. ஒரு ஸ்மார்ட்போன் போதும்; அனைத்தையும் சாத்தியமாக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக டேட்டிங் செயலியின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அதுவும் கொரோனா காலகட்டத்தில் இந்த செயலிகளின் பயன்பாடு என்பது பன்மடங்கு உயர்ந்தது.
இதில், Tinder, Bumble, Hinge, Tinder, OkCupid, Coffee Meets Bagel, Happn போன்ற செயலிகள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலிகள் மூலம் உலகில் உள்ள எவருடன் நட்பு பாராட்டலாம். ஆனால், இப்போதைய கதை அதுவல்ல. ஊர் முழுக்க ராயா ராயா என்று ஒரே பேச்சு. அப்போது தான்
Raya Dating App
குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது.
ராயா டேட்டிங் செயலி
ஆப்பிள் App Store-இல் மட்டுமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும். அதாவது, ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேட்டிங் செயலி இதுவாம். நல்ல பணம் படைத்தவர்கள் மற்றும் பிரபலமானவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான்
ராயா டேட்டிங் ஆப்
. இதில் பதிவு செய்திருந்தால், பிரபலங்கள் ஒருவருக்கொருவர் செயலி உதவியுடன் நட்பு பாராட்டலாம். பென் அஃப்லெக், ட்ரூ பேரிமோர், ஜான்வி கபூர், வாணி கபூர் என பல பிரபலங்களும் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
அப்படியா என்று நீங்கள் துள்ளி குதித்து செயலியை டவுன்லோட் செய்ய தயாராக வேண்டாம். இது முற்றிலும் பாதுகாக்கப்பட்ட டேட்டிங் தளம். இதில் பதிவு செய்யப்படும் பயனர்களின் சுய விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இந்த செயலிக்கான அணுகல் கிடைக்கும். இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த செயலியில் பதிவுசெய்து காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?
பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராயா
இந்த செயலியில் பதிவு செய்து பயனர்களாக உள்ள நபர்கள், பிறர் பக்கத்திற்குச் சென்று Screenshot எடுக்க நினைத்தால் கூட உடனடியாக அகற்றப்படுவார்கள். இதில் உள்ள பயனர்களின் தகவல்கள் எந்த காரணத்திற்காவும் கசியவிடப்படாது. இதன் காரணமாகவே இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது. இந்த பாதுகாப்பு அம்சத்தை கருத்திற்கொண்டு தான் பிரபலங்கள் ராயா செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது வரை ராயா டேட்டிங் செயலியை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பலபேர் டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலரோ இங்கே பிரிந்து விடுகின்றனர் என்பது நிழல் உலகத்தின் அமைதியான வரலாறு. பாதுகாப்பாக இந்த செயலி இருப்பதால், சமூக வலைதளமாகவும் பிரபலங்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இலவச அனுமதி எல்லாம் கிடையாது. மாதத்திற்கு 8 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் அவர்கள் செலுத்தவேண்டி இருக்குமாம்!
delete google history: உங்கள் ரகசிய தகவல்களை கூகுள் சேமிக்கிறது! அதை அழிக்க என்ன செய்ய வேண்டும்?