தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி ஜாமீனில் வெளியே வந்தபோது, அவரை தமிழகத்தில் ஆளும் திமுகவின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நேரில் சென்று வரவேற்றார்.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 62 வயதான சகாய மேரிக்கு, தஞ்சை நீதிமன்றம் ஜாமீன் வழயங்கியதை அடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அவருக்கு’ திருச்சி (கிழக்கு) திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சால்வை போர்த்துவது போன்ற புகைப்படத்தை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இறப்பதற்கு முன், பள்ளி மாணவி மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், சகாய மேரி, தன்னை சித்திரவதை செய்து, மன உளைச்சலை தூண்டி, தற்கொலைக்கு வழிவகுத்தவர் என குறிப்பிட்டுள்ள்ளார்.
இப்படி ஒரு சூழலில், திமுக எம்.எல்.ஏ, சகாய மேரியை கிராமப்புற ஏழை குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டவர் என்றும், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதை அறிந்ததும் அவரை வரவேற்று நலம் விசாரிக்க முடிவு செய்ததாகவும், “நீதி வெல்லும். மத நல்லிணக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்” என்று ஃபேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.
தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள சேக்ரட் ஹார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கிப்படித்த மாணவி’ கடந்த ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன், மாணவி அளித்த வாக்குமூலத்தில்’ சகாய மேரி தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தன்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும், விடுதி கட்டணத்தை செலுத்த முடியாதபோது தனக்கு சரியாக உணவு கொடுக்க மறுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் எஃப்ஐஆரிலும் இந்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன.
மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவள் மரணப் படுக்கையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது, அதில்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியில் இருந்த மற்றொரு கன்னியாஸ்திரி ராகுல் மேரி’ தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொன்னதாகக் கூறினார்.
வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்வலர், மதம் மாற மறுத்ததே’ நீ தவறாக நடத்தப்பட்டதற்குக் காரணமா என்று அவளிடம் கேட்க, மாணவியும், “அப்படியும் இருக்கலாம்” என்று கூறுகிறார்.
இதையடுத்து’ மாணவியின் மரணத்திற்குப் பிறகு பாஜக மற்றும் விஎச்பி நடத்திய போராட்டத்தில்’ கட்டாய மதமாற்றம் காரணமாக மாணவி தற்கொலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கை மாநில காவல்துறையில் இருந்து சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடர உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 14ஆம் தேதி திங்கள்கிழமை அனுமதித்தது. விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் ஜனவரி 31ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“