நடிகர்
தனுஷ்
தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். மாறன்,
திருச்சிற்றம்பலம்
, நானே வருவேன்,
வாத்தி
என படு பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவர் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவிருக்கிறது.
இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிக்கொண்டிருக்கும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் கடந்தாண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் திருச்சிற்றம்பலம் எனும் படத்தில்தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
நடுக்கடலில் அரபிக் குத்து பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே..வீடியோ உள்ளே..!
இப்படத்திற்கு
அனிருத்
இசையமைக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அனிருத் மற்றும் தனுஷின் கூட்டணியில் இப்படம் உருவாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் அதைத்தொடர்ந்து இப்படத்தைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
இதன்காரணமாக இப்படம் என்ன ஆனது என ரசிகர்கள் படக்குழுவை கேள்விகேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இப்படத்தைப்பற்றிய சூப்பர் தகவலை இப்படத்தின் இயக்குனர் மித்ரன் பகிர்ந்துள்ளார்.
அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும், தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர்,
பாரதிராஜா
, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாலினியை வரவேற்ற யாஷிகா ; வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள்